கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

கொழும்பில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் பல வீடுகள் சேதம்

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு வீசிய கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை வரையிலான வீதி, கொழும்பு-காலி வீதியின் கிராண்ட்பாஸை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதன் காரணமாக கிராண்ட்பாஸில் உள்ள சென் ஜோசப் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அருகிலிருந்த 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )