
இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக இலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில தொலகே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த புதிய நியமனம் இன்று (26) முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கை இராணுவத்தின் 37ஆவது தலைமைப் பிரதானி ஆவார்.

