
இலங்கையின் சிறந்த வர்த்தக ஆலோசகர்களை உருவாக்குவதற்கு கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் (SLIM) ஒன்றிணைவு
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு (SEDD) ஊடாக நாடு முழுவதும் உள்ள தொழில் முயற்சியாளார்களை முன்னேற்றுவதற்காக தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி திட்டத் (EDP) தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (DO) மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்கள் (EDTO), என ஆகியோர் “ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் – Relationship Officers” ஆகிய பதவிகளின் கீழ் நாட்டின் சிறந்த ஆலோசகர்களாக மாற்றும் திட்டம் நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபே சிங்கர் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
அதன்படி மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 53 உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச மட்டத்தில் பெறுமதி வாய்ந்த இந்த பாடநெறியை தொடர்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றதுடன், இங்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்நிக சாதாரண சேவை பயிற்சி பாடநெறி/ பட்டப் படிப்பை விட மாற்றமானதுடன் இது “கற்றுக் கொண்டு செய்தல் (Learn By Doing)” “அனுபவத்துடன் கற்றல்” என்ற அடிப்படையில் பிரயோக நிகழ்வாகும்.
இப்பாடநெறி அடிப்படையில் அவர்களின் திறமை மற்றும் மனப்பான்மை விருத்திக்கு இது உதவுவதுடன் அதனால் நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக சரியான ஆலோசனை சேவையை அவர்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டத்திற்காக இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் 100 மில்லியன் அளவில் முதலீடு செய்வதற்கு எதிர்பார்ப்பதுடன் முதற்கட்ட நடவடிக்கையாக விரிவுரையாளர் சபையினால் இலவசமாக இப்பாடநெறி நடாத்தப்படும்.
அதன்படி முதல் நிகழ்வாக இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

