இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெற முடியும்

இன்று முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெற முடியும்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் நாட்டில் காலப்பகுதியில் வாகனங்களை செலுத்துவதற்கு தேவையான ஓட்டுநர் உரிமங்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதற்கான கவுண்டர் இன்று திறக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இதுவரை வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன ,

சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு பெற்று வாகனங்களை செலுத்துகின்றனர்.

இதன் பொது அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் கார்கள் போன்ற இலகுரக வாகனங்களைப் பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கூறினார்.

இருப்பினும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமங்கள் மட்டுமே வழங்கப்படும் எனவும் கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படாது என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )