
மாத்தறை கபுகமவில் துப்பாக்கிச் சூடுஒருவர் காயம்
மாத்தறை கபுகம பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அங்குள்ள வீடொன்றில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் .
போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

