
தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால்
நிறைவேற்றப்பட்டது .
.
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை .
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டும் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.
2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க ,அதிகாரிகளை நீக்குவதற்கான நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 17 இன் படி, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மாஅதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால், நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் தெரிவித்தார்.
இந்தப் பிரேரணையை நிறைவேற்ற 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகள் போதுமானது .
இன்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, பொலிஸ் மாஅதிபர் பதவிக்கான பெயரை அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.

