
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்று அவசர சந்திப்பு மன்னார் காற்றாலை குறித்த கலந்துரையாடல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அவசரமாகச் சந்திக்கின்றார்.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கடித்ததில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு பாராமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES Uncategorized

