
முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்றுவிசேட அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தனது பதவிக் காலத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றவுள்ளதாக அவரது அரசியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

