
மதுபான போத்தல்களில் தண்ணீர் கலப்படம் செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது
ஒரு பிரபல மதுபான நிறுவனத்தால் வெளியிடப்பட்ட மதுபான போத்தல்களில் தண்ணீரைக் கலப்படம் செய்யும் மோசடி செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்கள சிறப்பு செயல்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த வியாபாரிகள் மதுபான போத்தல்களின் மூடிகளை சூட்சுமமான முறையில் கழற்றி , அவற்றில் தண்ணீரைக் கலந்து, மூடிகளை மீண்டும் இணைத்து விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற 33 மதுபான போத்தல்கள் கலால் அதிகாரிகளால் பறிமுதல் கைப்பற்றப்பட்டன.
கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின்படி, குறித்த மதுபானக் கடை சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
CATEGORIES Sri Lanka

