பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசிக்கான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

61வது இராணுவ படை பிரிவு முகாமுக்கும் சிறைச்சாலையின் பழைய நிர்வாகக் கட்டிடத்திற்கும் இடையிலான பகுதியில் பொதி ஒன்றில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் சிறப்புப் படை தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் இரண்டாம் இலக்க சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அதிகாரி ஒருவர் ஏதோ விழுகின்ற சத்தம் கேட்டு, பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவித்த பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த பொதி கண்டுபிடிக்கப்பட்டது.

4 ஸ்மார்ட்போன்கள், ஒரு சிம் கார்டு, 10 சார்ஜர்கள், 07 டேட்டா கேபிள்கள், 07 ஹேண்ட்ஸ்ஃப்ரீ சாதனங்கள் மற்றும் ஒரு தொகை புகையிலை ஆகியவை இந்த பொதியிலிருந்தது கைப்பற்றப்பட்டன .

கைப்பற்ற அனைத்து பொருட்களும் மேலதிக விசாரணைக்காக ரத்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைச்சாலைத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )