
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி செல்லும் ஸ்கெவி சிமொன்ஸ் ?
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மத்தியகளவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தமொன்றில் அதன் முன்னாள் முன்களவீரரான கிறிஸ்டோபர் என்குங்குவை உள்ளடக்குவதற்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பருவகாலத்தில் மூன்று கோல்களையே 27 வயதான என்குங்கு பெற்றதுடன், 18 போட்டிகளில் மாற்று வீரராகவே களமிறங்கியிருந்தார். எவ்வாறாயினும் சிமொன்ஸுக்கு பாரிய தொகையை லெய்ப்ஸிக் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

