கம்பஹாவில் நாளை நீர்வெட்டு

கம்பஹாவில் நாளை நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இந்த நீர்வெட்டு நாளை (14) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி,  நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கோங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கோலவத்த, கொரகாதெனிய, ரண்பொக்குனகம, அத்தனகல்ல, பஸ்யால, உராபொல, திக்கந்த, மிவிட்டிகம்மன, மாத்தலான, ஹக்கல்ல,  கல்லபிட்டிய,  எல்லமுல்ல, படலிய , மாஹிம்புல மற்றும் அலவல,  ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )