சட்டவிரோதமான ஆயுதங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான ஆயுதங்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடயில் சட்டவிரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவரை இன்று (15) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்பேரில் சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் T-56 ரக துப்பாக்கி, ஒரு கைத் துப்பாக்கி, T-56 தோட்டாக்கள், கைத் துப்பாக்கி தோட்டாக்கள், மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கத்திகளையும் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்றும் தற்போது பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )