
மின்சார சபையின் பொறியாளர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்இலங்கை மின்சாரசபை
கடந்த சில ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் பொறியாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் 226 பொறியாளர்கள்,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சபையின் ஊடக செய்தித் தொடர்பாளர் தம்மிக விமலரத்ன கூறுகிறார்.
இலங்கை மின்சார சபையின் மொத்த பொறியாளர்களில் 20 சதவீதமானவர்கள் இவ்வாறு வெளியேறியதாக புள்ளிவிவரங்கள் கூறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களில் 85 சதவீதமாணவர்கள் மின் பொறியாளர்கள் எனவும் மேலும் 8 சதவீதமாணவர்கள் இயந்திர பொறியாளர்கள் எனவும் 7 சதவீதம் பேர் சிவில் பொறியாளர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளை , பொறியாளர்கள் இருக்கும்போதே 60 புதிய பொறியாளர்களை மேலதிகமாக நியமிக்க இலங்கை மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,இதனால் ஆட்சேர்ப்பு நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும் மின் பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.

