
மாத்தாளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் கிராம அலுவலர் உயிரிழப்பு
மாத்தளை கைகாவல பகுதியில் தனியார் பஸ்ஸொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடமையின் நிமித்தம் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் , கிராம சேவகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் மாத்தளை ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம அலுவலர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை ரத்தோட்டை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

