
கடந்த 24 மணித்தியாலத்தில் 689 பேர் கைது
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில்
குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 242 பேரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 158 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 100 பேரும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 3635 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

