விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானிய பணம்  திருடப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானிய பணம் திருடப்பட்டுள்ளது

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியப் பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (18)  இடம்பெற்ற கூட்டத் தொடரில் சுசந்த குமார நவரத்ன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர், ”அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் ரூ.2,934,310 திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சில விவசாயிகளிடமிருந்து உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.”ன தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)