
அமெரிக்க ‘USS செண்டா பார்பரா’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘USS செண்டா பார்பரா’ கப்பல் ஒன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பளித்தனர்.
விநியோக மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை வந்தடைந்த ,127.6 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலின் தளபதியாக A.J.OCHS பணியாற்றுகிறார்.
கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், குழுவினர் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும்.
CATEGORIES Sri Lanka

