
”ஏ.கே 64” வில் மீண்டும் இணையும் அஜித்ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி
அஜித்தின் அடுத்த ”ஏ.கே 64” திரைப்படத்தை
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
இந்த நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் தனது ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து வேறுபட்டதாக இந்த திரைப்படம் இருக்கும் எனவும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் எனவும் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறியுள்ளார்.

