காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அம்பன்பொல பகுதியில் இன்று (17) காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அந்த நபர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )