மூன்றாவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

மூன்றாவது நாளாக தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.

மேலும் , வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )