யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். கொடிகாமம் பகுதியில் நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நேற்று (19) நிலத்தை அகழ்ந்தபோது வெடிக்காத நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குழாய்களைப் புதைப்பதற்காக நிலத்தை அகழ்ந்து போது சந்தேகத்துக்கிடமான முறையில் உரைப் பை ஒன்று காணப்பட்டதையடுத்து, கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த உரைப் பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைக் கோர்வைகள் காணப்பட்டன.

அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்படுகின்றன எனவும், அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )