
தொடரும் வேலைநிறுத்தத்தால் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு
தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று 5வது நாளாகவும் தொடரும் நிலையில் , மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தாம் தயாரில்லை என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தபால் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கைரேகை இயந்திரத்தில் வருகை பதிவு மற்றும் மேலதிக நேர வேலை குறித்த தபால் ஊழியர்களுக்கான நடைமுறைகளை அரசாங்கம் திரும்பப் பெறாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
கைரேகை இயந்திரத்தில் வருகை பதிவு மற்றும் மேலதிக நேர வேலை உட்பட 19 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவில் தொடங்கிய தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.
இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு அரசாங்கத்திற்கு 140 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

