முன்னாள் ஜனாதிபதி ரணில் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

விசாரணை முழுமையடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

சந்தேக நபருக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

உண்மைகளை பரிசீலித்த கொழும்பு நீதவான் நிலுபுலி லங்காபுர, சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )