இன்று மற்றும் நாளை கடலோர ரயில் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது

இன்று மற்றும் நாளை கடலோர ரயில் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது

தொடண்டுவ மற்றும் புஸ்ஸ இடையேயான கடலோர ரயில் பாதையில் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரியா அறிவித்தார்.

கடலோர ரயில் பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை 24 ஆம் திகதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன,

  1. ரயில் எண் 8319, காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.15 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்படும் ரயில்
  2. ரயில் எண் 8788 ,மருதானை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு காலிக்கு புறப்படும் ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய நாளை 24 ஆம் திகதி ரயில்கள் இயக்கப்படும் நேரம் இவை ,

  1. காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 05.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்பட திட்டமிடப்பட்ட ரயில் எண் 8327 சமுத்திர தேவி காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாகி காலை 06.30 மணிக்கு பயணத்தைத் தொடங்கும்.
  2. காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு புறப்படும் ரயில் எண் 8320, காலை 08.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.

மேலும், இன்று மாலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு காலிக்கு இயக்கப்படும் இரவு அஞ்சல் ரயில் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )