
முன்னாள் ஜனாதிபதி ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
கொழும்பு மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரிழப்பு காரணமாக முன்னாள் ஜனாதிபதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி, சிறைச்சாலை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கொழும்பு தேசிய மருத்துவமனையில்
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, நேற்று இரவு வைக்க உத்தரவிடப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை நேற்று சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் சிறைச்சாலை மருத்துவர்களும், அவருக்கு வீட்டிலிருந்தே உணவு வழங்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி, சிறைச்சாலை தலைமையகம் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது

