நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில்

நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில்

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு) நிஷாந்த உலுகேதென்னவை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (27) பிறப்பித்தது.

பொதுஹெர பகுதியில் நபரொருவரை கடத்தி, கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )