மூன்று வாகனங்கள் மோதி யாழ் கண்டி பிரதான வீதியில் விபத்து இருவர் உயிரிழப்பு

மூன்று வாகனங்கள் மோதி யாழ் கண்டி பிரதான வீதியில் விபத்து இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்-கண்டி பிரதான வீதி பரந்தன் சந்திக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸோன்று , டிப்பர் லொறி , மோட்டார் சைக்கிள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வீதி ஓரத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​பின்னால் வந்த ஒரு டிப்பர் லொறி பஸ்ஸின் மீது மோதிய பின்னர் அதன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் டிப்பர் லொறி மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் யில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )