
விதிகளை மீறிச் செலுத்தப்பட்ட 25ற்கும் அதிக மோட்டார் சைக்கிள்கள் கல்முனையில் கைப்பற்றப்பட்டது
போக்குவரத்து விதிகளை மீறிச் செலுத்தப்பட்ட பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை, அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை,
ஆவணம் காப்புறுதி இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை ,
ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தமை மற்றும்
அதிவேகமாக செலுத்தியமை,
அதிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்,
தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உட்பட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை போன்ற பல்வேறு போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன .
இந்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

