
திஸ்ஸமஹாராமாவில் துப்பாக்கிச் சூடு58 வயதுடைய ஒருவர் பலி
திஸ்ஸமஹாராம, முத்தியம்மான பகுதியில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு
கல் கடஸ் ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிதாரி, துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் , சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் உயிரிழந்தவரின் மகனின் மனைவிக்கும் இடையிலான உறவின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

