
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்
இலங்கையில், அண்மையில் மனிதப் புதை குழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்தகால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவை யையும் வலியுறுத்துகின்றன என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல்போனோர் தினமான நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ,”ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் கதி என்னவென்று தெரியவில்லை , இது “மௌனம், செயலற்றதன்மை மற்றும் தண்டனையின்மையால் ஏற்பட்ட ஒரு “தேசிய காயம்” ஆகும்.
அன்புக்குரியவரைப் பற்றிய பதில்கள் இல்லாமல் விடப்படும் வலி, காலத்தால் மட்டுமே குணப்படுத்த முடியாத ஓர்அதிர்ச்சி என்றும், உண்மை மற்றும் நீதிஇல்லாததால் துன்பம், ஆழமடைகின்றது .
சர்வதேச காணாமல்போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் ,சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுகிறது.
நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகள் ஆகியவை நல்லிணக்கம், நிறுவனங்கள் மீதான நம்பிக்கை மற்றும் இலங்கையர்கள் நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கும் நிலையான அமைதியின் பிரிக்க முடியாத அடித்தளங்கள்.” என தெரிவித்தார்.
வலுக்கட்டாயமாக காணாமல் போவதி லிருந்து அனைவரையும் பாதுகாப்பதற் கான சர்வதேச மாநாட்டை அங்கீகரிப்பது மற்றும் காணாமல்போனவர்கள் மீதான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுவது உட்பட இந்த வேதனையான மரபை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை நட வடிக்கை எடுத்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண் காணிப்பு, அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவலை கொண்டுள்ளது. இந்தநிலையில், தங்கள் உரிமை களைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளஅனைவரும் தண்டிக்கப்படக்கூடாதுஎன்றும், பாதுகாக்கப்பட வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இலங்கைக்குவிஜயம் செய்தபோது, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், காணாமல்போனவர்களின் குடும்பங்களைச் சந்தித்து உண்மையை வெளிக்கொணர்வது ஓர் அடிப்படை உரிமைஎன்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.
மனிதப் புதைகுழி தொடர்பில் விசாரிக்க அவர் விடுத்த அழைப்பு, கடந்தகாலத்தை தைரியத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் எதிர்கொள்ளவேண்டியதன் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்தச் செயற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஆதரவை வழங்குகின்றது.இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும்,தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும்ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கியநாடுகள் சபை உறுதுணையாக நிற்கின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும்மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணரமுடியும் என்பதை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான, சுயாதீனமானவிசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கியநாடுகள் சபை தொடர்ந்து உறுதியாகஇருக்கின்றது என்றும் இலங்கைக் கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங் கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

