
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பாக போலியாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் செய்தி குறித்து ஊடக அறிவித்தல்
வெளிநாட்டில் உள்ள இலங்கையில் பல்வேறு அமைப்பு ரீதியான குற்றங்களும் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே எனும் பெயருடைய நபர் உட்பட்ட குழுவினர் அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து இலங்கை பொலிஸாரினால் இந்தோனேசியா பொலிஸாரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினால் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இது தொடர்பாக போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள் போன்ற செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பாக, அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் எனக் கூறப்படும் ஒரு போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
குறிப்பாக, அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் புகைப்படம் எனக் கூறப்படும் ஒரு போலி புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
விசேடமாக அனைத்து ரீதியான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பிற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதுடன் உண்மையான சரியான தகவல்களை மாத்திரம் சமூகம் மற்றும் ஏனைய ஊடகங்களில் வெளியிடுமாறு சகல ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பாவனையாளர்களையும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகத்தில் அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 2025.08.30 ஆம் திகதி இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டார். அதன் போது இந்தோனேஷிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
இச்செயற்பாட்டில் கலந்து கொண்ட இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளுக்காக அவசியமான உதவிகளை வழங்கிய இந்தோனேசியா பொலிஸாருக்கு நன்றி தெரிவிக்கும் சிறிய நிகழ்வு
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றதுடன் அதன் போது பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன் போது இச்செயற்பாட்டில் கலந்து கொண்டன இலங்கை மற்றும் இந்தோனேஷியாவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நினைவுச்சின்னம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் நடைபெற்றது.


