களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அதிகரிக்கும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினை

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் அதிகரிக்கும் கட்டாக்காலி மாடுகள் பிரச்சினை

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் , களுவாஞ்சிக்குடி சந்தை மற்றும் அதனை அண்டிய சூழலிலும், பட்டிருப்பு வீதியின் பாலம் வரையாக கட்டாக்காலி மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதாக , பொதுமக்களும் , வியாபாரிகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட காலம் வரை கட்டுப்பாடுகள் சட்டங்கள்,அமுல்படுத்தப்பட்டாலும் சில நாட்களில் கட்டாக்காலி மாடுகள் வருவதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், அதிகளவான வீதி விபத்துகள் ஏற்ப்பட்டு வருவதாகவும் மக்கள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்

இதனை கட்டுபடுத்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உரிய இறுக்கமான நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே தாம் தமது வியாபார நடவடிக்கைகளை தங்கு தடையின்றி முன்னெடுக்க முடியும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே போல் வீதிகளில் பயணம் செய்யும் போது கட்டாகாலிகள் வாகனங்களினை சேதப்படுத்துவதாகவும் வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )