
முதலாமிடத்துக்கு முன்னேறிய சிகண்டர் ராசா
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகளிலும் 151 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையிலேயே மூன்றாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை ராசா அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
1. சிகண்டர் ராசா, 2. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய், 3. மொஹமட் நபி, 4. மெஹிடி ஹஸன் மிராஸ், 5. மிஷெல் பிறேஸ்வெல்.
CATEGORIES Sports News

