
மட்டக்களப்பு வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரை
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரையில் இருநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நந்திக்கொடி ஏந்தியவாறு தங்கள் வேண்டுதலை வேண்டி அரோகரா கோசத்துடன் சென்றனர்.
CATEGORIES Sri Lanka

