15 உயிர்களை காவுகொண்டஎல்ல – வெல்லவாய பஸ் 2023ல்பதிவு நீக்கம் செய்யப்பட்டது-போக்குவரத்து பிரதி அமைச்சர்

15 உயிர்களை காவுகொண்டஎல்ல – வெல்லவாய பஸ் 2023ல்பதிவு நீக்கம் செய்யப்பட்டது-போக்குவரத்து பிரதி அமைச்சர்

எல்ல – வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் , 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்டது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த வீதியில் விபத்துக்களைக் குறைப்பதற்கு போக்குவரத்து ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை ,மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் குழுவினரும் ,வீதி பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பஸ்ஸை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )