
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
அம்பாறையில் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவகிரியாவ வாவியில் நேற்று (07) மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மாபலகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நண்பர்களுடன் இணைந்து நவகிரியாவ வாவியில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

