
மொரட்டுவை முன்னாள் மேயருக்கு விளக்கமறியல்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (10) கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சமன்லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka

