
புறக்கோட்டை இ.போ.ச பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை
மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் (2025.09.11) இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ்நிலையம் மூடப்பட்டது.
அதன்படி, இம்மறுசீரமைப்புப் பணிகள் நிறைவு பெறும் வரை புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை போன்ற இடங்களில் இருந்து இபோச பஸ்கள் பயணிக்கும்.
ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் கீழ் செயல்படுத்தப்படும்

