மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் புறப்பட்ட பொடி மெனிகே கடுகதி ரயில் இன்று (11) தடம் புரண்டுள்ளதால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட குறித்த ரயில் ஹாலிஎல ரயில் நிலையத்திற்கும் பதுளை ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது. இதனையடுத்து குறித்த ரயிலை மீள் தடம் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )