இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையிலான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. 

அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுள்ளது.

நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நேற்று (10) ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )