
அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருக்கும்இடையில் சந்திப்பு
மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கிற்கும் இடையே நேற்று (10) ஒரு சந்திப்பு நடைபெற்றது.
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த கால மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணையை நடத்தி பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவ இந்த வாய்ப்பு தவறவிடப்படாது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

