குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி

குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி

தெல்லிப்பழை – வித்தகபுரத்தைச் சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்வதி எனும் 82 வயதான பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை (09) வீட்டுக்கு பின்னாலுள்ள தென்னை ஓலையுடன் இருந்த குளவிக்கூட்டை தட்டிப் பார்த்த போது அதிலிருந்த குளவிகள் அவர் மீது கொட்டியுள்ளது. 

பின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )