
அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி காருடன் மோதி விபத்து
ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த காருடன் மோதிய விபத்தில் 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .
முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் இவ்வாறு விபத்தில் காயமடைந்தனர் .
முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம் காருடன் மோதியதில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு குழந்தையைத் தவிர ஏனையோர் சிகிச்சைக்குப்பின்னர் வைத்தியசாலையின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர் .
CATEGORIES Sri Lanka

