
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வேண் மற்றும் லொறி மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறிக்கு பின்னால் பயணித்த வேன் இன்று அதிகாலை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் புஷ்பகுமாரி சந்தமாலி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் , எதிர்வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யத் தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தின்போது சம்பவத்தின் போது உயிரிழந்த பெண் வேனின் முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர் வேனின் ஓட்டுநர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

