
மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தால் போக்குவரத்திற்கு பாரிய இடையூறு
சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று (18) மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியிலும் கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

