ரோபோ ஷங்கர் காலமானார்

ரோபோ ஷங்கர் காலமானார்

பிரபல தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ரோபோ ஷங்கர் காலமானார் .

சில வருடங்களுக்கு முன்னர் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் புதிய படப்பிடிப்பில் நடித்து வந்த ரோபா சங்கர் ,திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளானர்.

இதனையடுத்து, வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த ரோபோ ஷங்கர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிய ரோபோ ஷங்கர், பின் வெள்ளித்திரையில் ரசிகர்களின் அபிமானம் பெற்ற நகைச்சுவை நடிகராகினார்.

இறக்கும் போது அவருக்கு வயது 48.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )