காத்தான்குடி பிரதான வீதியில்பஸ்-லொறி-முச்சக்கர வண்டி மோதி விபத்து

காத்தான்குடி பிரதான வீதியில்பஸ்-லொறி-முச்சக்கர வண்டி மோதி விபத்து

காத்தான்குடி பிரதான வீதியில், இன்று அதிகாலை ,அதிசொகுசு பஸ்ஸொன்று லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற லொறி ஒன்றை பிரதான வீதியின் ஓரமாக உள்ள உணவகதிற்கு அருகில் நிறுத்த முற்பட்டபோது , கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்றபஸ்ஸொன்று ,வேகக் கட்டுப்பாட்டினை இழந்து லொறியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

அதி சொகுசு பஸ்ஸின் முன் பகுதி பாரிய சேதத்துக்குள்ளானதுடன் லொறியின் பின் பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை. எனினும் பஸ் சாரதி நடத்துனர், முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )