தியாக தீபம் திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நல்லூரில் திறப்பு

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் நேற்று (20) நல்லூரில்திறந்து வைக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு வரலாற்று ஆவணக் காட்சியகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

IMG 20250920 WA0067
IMG 20250920 WA0067

ஆவண காட்சியகத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை மூத்த போராளி பஷீர் காக்காவால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

IMG 20250920 WA0059

தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள், பத்திரிகை ஆவணங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )