
போதைப்பொருளுடன் சிக்கிய லொறியிலிருந்து நவீன துப்பாக்கிகள் மீட்பு
தங்காலையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றபோது, தடுத்து நிறுத்தப்பட்ட லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறி இன்று காலை பொலிஸாரால் சோதனை செய்யப்பட்ட போது வாகனத்திற்குள் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெராயின் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

